திருப்பூர் : திருப்பூரில் ஆனைமலையாறு நல்லாறு அணைத்திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர்.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தில் நிலவி வந்த வறட்சியைப் போக்கும் விதமாக 1958ம் ஆண்டு காமராஜர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டுக்கு 70 அங்குலம் அளவிற்கு மழை பெய்து அரபிக்கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்த 9 அணைகள் அமைக்கும் திட்டத்தை கேரள அரசுடன் ஒப்பந்தம் இயற்றி நிறைவேற்றப்பட்டது. மேல் நீராறு, கீழ் நீராறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி அணை உள்ளிட்ட 8 அணைகள் கட்டப்பட்ட நிலையில் கேரளாவில் இடைமலையாறு அணை கட்டும் வரையிலும் ஆனைமலையாறு அணையை கட்டக்கூடாது என ஒப்பந்தம் இயற்றப்பட்டது. மேலும், மேல் நிராறில் இருந்து கேரளாவிற்கு தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.
1985 ம் ஆண்டு இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் ஒரு கால்வாய் கட்டி முடிக்கப்படவில்லை என கேரள அரசு தெரிவிப்பதால் ஆனைமலையாறு அணை கட்டமுடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற ஆனைமலை, நல்லாறு அணைகளை விரைந்து கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரபாண்டி பிரிவில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர்.
இந்த பேரணிக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் இறுதியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்த விவசாயிகள் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை மனு அளித்தனர்.