கோவை : செல்வபுரம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் ,பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செண்டரிங் வேலை செய்து வரும் உதயராஜின் மகன் சுபாஷ் (8). இவர், செல்வபுரம் சிவாலயா திரையரங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று சிறுவன் வழக்கம் போல பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து எல்.ஐ.சி. காலனி அருகே வந்து கொண்டிருந்த சிறுவன் மீது பயங்கரமாக மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த சிறுவனை அருகே இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். .ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பம் குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சிறுவனின் பிரேதத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இந்த தகவலறிந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் சிறுவனின் காலணியை நெஞ்சில் வைத்து கண்ணீர் வடித்த காட்சி காண்போர் நெஞ்சை பதற வைத்தது.