கோவை : தேசிய தபால் வாரத்தையொட்டி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஏராளமான பள்ளி மாணவர்கள் தலைமை தபால் நிலையத்தைப் பார்வையிட்டனர்.

கடந்த 9-ம் தேதி முதல் இன்று (அக்.,15) வரை தேசிய தபால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவை ரயில்நிலையத்தில் இருக்கும் தலைமை தபால் நிலையத்தை கோவை மாநகராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது, தபால் அலுவலகத்திற்கு வரும் அஞ்சல்களை எவ்வாறு உரியவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது உள்ளிட்ட வழிமுறைகள் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பார் கோடு, ஆன்-லைன் டிரேக் வசதிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அஞ்சல்களை விரைவாக டெலிவரி செய்வது பற்றியும் பள்ளி மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டனர். அதோடு, மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு இலவசமாக, தபால் துறை பற்றிய கருத்துக்களை இலவசமாக எழுதி அனுப்பும் வசதி செய்து கொடுக்கப்பட்டது.