கோவை : கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தூரல் மழைக்கு வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் குறைவாக காணப்படுவதால் மழை நிதானமாகப் பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் பகுதி நேர மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரம் வெப்ப நிலையைப் பொறுத்தவரையில் 31 டிகிரி செல்சியஸ் அதிகபட்சம் பதிவாகக்கூடும் இரவு நேரத்தில் 21.5 செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், காற்றின் வேகம் 8 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்," என்றார்.