கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நகரில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. உபயோகப்படுத்தாமல் உள்ள ப்ளாஸ்டிக் குவளை, தண்ணீர் தொட்டி மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால், மழை காலத்தில் பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தும் புழுக்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. எனவே, மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு உருவாவதை தடுப்பதற்காக குடியிருப்புவாசிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

குடியிருப்பை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராத தொகையும் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 254 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையாக மொத்தம் ரூ.1,28,450 வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், டெங்கு கொசு உருவாகும் விதத்தில் தண்ணீர் தொட்டிகளை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி மருத்துவமனைகள், அலுவலகங்கள், காலி இடங்கள், குப்பை சேகரிக்கப்படும் இடங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் பாதிப்பை முற்றிலுமாக தவிர்க்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். மேலும், எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் இருப்பிடத்தை சுத்தமாக பராமரிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. சுகாதாரமாகப் பராமரிப்பவர்களின் வீட்டுவாசலில் டெங்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. தினமும் மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, என்றனர்.
முன்னதாக இன்று காலை வடக்கு மண்டலம் 47-வது வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அதிகாரிகள் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். நகர் நல மருத்துவர் மரு.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.