தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யாததால் கூடுதல் செலவினம் ஏற்படுவதாக தோட்ட தொழிலதிபர்கள் வேதனை

கோவை : சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை முறையாக வசூலிக்கும் தமிழக அரசு, தொழிலாளர் குடியிருப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தராததால் கூடுதல் செலவினம் ஏற்படுவதாக தோட்ட தொழிலதிபர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை : சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை முறையாக வசூலிக்கும் தமிழக அரசு, தொழிலாளர் குடியிருப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தராததால் கூடுதல் செலவினம் ஏற்படுவதாக தோட்ட தொழிலதிபர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு தோட்ட தொழிலதிபர்கள் சங்கத்தின் 65-வது ஆண்டு குழு கூட்டம் கோவையில் உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் தொழிலாளர் நலத்துறை தலைமை செயலாளர் சுனில் பாலிவால் கலந்து கொண்டார். 



பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு தோட்ட தொழிலதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரதீப் சுகுமார் பேசியதாவது :- தோட்ட அதிபர்களால் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வீடுகளுக்கு அரசு சொத்து வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும். சொத்துவரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை வசூலித்த போது அரசு தொழிலாளர் குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என்பதால் தொழிலதிபர்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. 



மேலும், தற்போதைய மழை காரணமாக மலைகளில் அமைந்துள்ள தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற தோட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அதிபர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்யும் வகையில், நீண்ட கால மற்றும் குறுங்கால கடனுதவிகளையோ அல்லது மானிய தொகைகளையோ வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொழிலாளர் பிடித்த தொகைகளை வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையில் அது தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தீர்வு ஏற்படும். 



தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு தொடர்பாக ஆண்டு இறுதியிலேயே கணிக்க முடியும். தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு 5 சதவீதம் அளவிற்கு கேளிக்கை விடுதிகள் அல்லது எக்கோ டூரிசம் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும், என்றார். 



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...