கோவை : ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகையை யொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அரசு போக்குவரத்து கழகம், கோவை மாவட்டம் சார்பில் கூடுதலாக வெளியூர்களுக்கு 300 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகைகள் வருகிற வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருகிறது. இதனை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவையிலிருந்து மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இதனை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகம், கோவை சார்பில் கூடுதலாக தினமும் வெளியூர்களுக்கு 300 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விடுமுறை தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதன்கிழமை காலை முதலே கையிருப்பில் உள்ள 300 மாற்றுப் பேருந்துகளை இயக்கவுள்ளோம். கூட்ட நெரிசலைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.