நீலகிரி: உதகை மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து கிடைத்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நீலகிரி மலை ரயில் அறக்கட்டளை சார்பில் மலைரயில் யுனெஸ்கோ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாரம்பரியமிக்க நீலகிரி மலை இரயில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் விரும்பி வருவது வழக்கம். இந்த மலை ரயில் நீராவி மூலம் மலைப்பாதையில் பல்சக்கரத்துடன் இயங்கி வருவதால், இதில் பயணிக்க பலரும் விரும்பி வருகின்றனர். இந்த மலை ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் சார்பில் பாரம்பரிய அந்தஸ்து கடந்த 2005ம் ஆண்டு வழங்கப்பட்டது.
அன்று முதல் ஆண்டுதோறும் யுனெஸ்கோ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கினார். இதில், நீலகிரி மலை ரயில் அறக்கட்டளை தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கொண்டனர்.