கோவை : வீரகேரளம் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய இடத்தில் பட்டாவுடன் கூடிய வீடுகள் கட்டி தரகோரி குமாரசாமி காலனி முத்தண்ணன் குளக்கரையில் வசிக்கும் மக்கள் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது குமாரசாமி காலனி முத்தண்ணன் குளக்கரை அருகில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யபட்ட இடங்களை மீட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களை உடனடியாக காலி செய்யும்படி குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் கூறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற வற்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு வீரகேரளம் பகுதி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியதிற்கு சொந்தமான 8.40 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனை பட்டாவுடன் கூடிய வீடுகள் கட்டி தர வலியுறுத்தி வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.