தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீர் ஓடையை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் ஓடையை மீட்கக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர் ஓடையை மீட்கக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மாணி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய பொதுமக்கள், மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மனு ஒன்றை அளித்தனர். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீரோடையை அரசு சார்பில் இரண்டு லட்ச ரூபாயில் செலவில் சீர் செய்து தரப்பட்ட ஓடை, அங்குள்ள தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓடையை மண்மூடி ஆக்கரமிப்பு செய்துள்ளதால், முக்கிய நீர்வழி தடம் தடைப்பட்டு மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் வந்து விடுகிறது. 

அங்கு வசிக்கும் 70 குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கழிவு நீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு ஆக்கிரமிப்பினை அகற்றி நீர் ஓடையை மீட்டு தரகோரி மனு அளித்தனர். 

இது குறித்து அன்னூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...