கோவை : நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் தென் திருமலையில் நடைபெற்ற மலையப்பசுவாமி அனுமந்தவாகனத்தில் திருவீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருமலை எனப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி ஆலயத்தில் நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடந்து மலையப்ப சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், சிம்ம வாகனம், முத்துபந்தல் வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அடுத்து நவராத்திரி நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான இன்று மலையப்பசுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று மலையப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தபட்டு பல வண்ண மலர்களால் சுவாமி அலங்காரம் செய்யபட்டு வில் அம்புடன் அனுமந்த வாகணத்தில் எழுந்தருளினார். பின்னர், வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இசை கலைஞர்களின் மேள தாளங்கள் முழங்க மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.