திருப்பூர் : வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் தோற்கடித்து இந்தியாவை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் தயாராக வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா, சுர்ஜித்பவன் கட்டிட நிதியளிப்பு விழா மற்றும் நவம்பர் புரட்சிதின 101-வது ஆண்டுவிழா பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் ரவுண்டானாவில் நடைபெற்றது.
இதில், திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக, திருப்பூர் மங்களம் சாலையில் தொடங்கிய பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்ற ராயபுரம் வரை சுமார் ஆயிரக்கணக்கானோர் சிவப்பு உடை அணிந்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

பின்னர், பொதுக்கூட்டத்தில் மாணிக் சர்க்கார் பேசியதாவது :- இந்தியாவில் மத்திய அரசில் உள்ள பா.ஜ.க. கடந்த தேர்தலின்போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் கடந்த ஆட்சி காலத்தைவிட 40 சதவிகித விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு என்றார்கள், மாறாக பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. பணமதிப்பிழப்பு போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
இந்தியாவில் 18 முதல் 30 வயது வரை சுமார் 22 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். அடிப்படை பிரச்சினைகளை மறைக்க சாதி, மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி அதனை முன்னிறுத்தி வருகின்றனர். மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதிலும், பா.ஜ.க. அல்லாத மாநிலங்களை மறைமுகமாக ஆட்சி செய்வதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
மேலும், இந்தியா தற்போது அபாயகரமான நிலையில் இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வையும், அதன் கூட்டாளிகளையும் தோற்கடித்து இந்தியாவை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் தயாராக வேண்டும், என்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.