கோவை : தமிழக அரசின் சார்பில் காவல்துறையின் உதவியுடன் குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘காவலன்’ என்ற புதிய ஆப்பிற்கு கோவை மக்கள் வரவேற்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இரண்டு புதிய மொபைல் அப்ளிகேஷன்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துள்ளார். இந்த காவலன் டையல் 100, காவலன் SOS என்ற புதிய மொபைல் ஆப் மூலம் பொதுமக்கள் காவல்துறையை விரைவில் தொடர்புகொண்டு அவசர கால உதவியைப் பெற இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் எளிதாகவும், நேரடியாகவும் மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசலாம். இந்த ஆப்பை தங்கள் மொபைலில் பயன்படுத்த மொபைலில் உள்ள பிளே ஸ்டோர் சென்று காவலன் sos என டைப் செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் முகவரி, கைபேசிய எண், ஆபத்தின் போது தொடர்புகொள்ளக் கூடிய இரண்டு உறவினர் அல்லது நண்பர்கள் எண்களையும் பதிவிட்டு இந்த ஆப்பை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கலாம்.
தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆகவே, இதை கட்டுப்படுத்தவும் பொதுமக்களுக்கு உதவவும் அரசின் சார்பில் இந்த புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காவலன் ஆப் மூலம் தங்கள் முகவரி பெயர்களை குறிப்பிடாமல் சில நொடிகளில் பொதுமக்கள் பிரச்சினைக்குரிய இடத்தில் உள்ள சிக்கலையும் காவல்துறைக்கு தெரியப்படுத்தி ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். இந்த மொபைல் ஆப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முக்கிய பங்காற்றும் என நம்புவதாக கோவையை சேர்ந்த பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி நான்சி ரெபேக்கா கூறியதாவது :- தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதை கட்டுப்படுத்த காவல்துறையினர் முன்வர வேண்டும் என அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், தமிழக அரசு புதிதாக ‘காவலன்’ என்ற ஆப் மூலம் எளிமையாக காவல்துறையை தொடர்பு கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மட்டுமில்லாமல் அனைத்து சட்ட விரோதங்களையும் தடுக்க எளிமையான முறைகளை கையாண்டு உள்ளது. இதற்கு பெண்களாய் மட்டுமல்லாமல் பொது மக்களாய் நான் என் வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நவீன பாதுகாப்பு திட்டம் முறையாக விரைவாக சரியாக செயல்படும் என்று நம்புகிறேன், என்றார்.
அதேபோல, கோவை மாவட்டத்தில் மதிய நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் வியாபாரம் செய்ய வருவது போல மர்ம நபர்கள் வந்து நோட்டமிட்டு செல்கின்றனர். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்கின்றனர். அதேபோல, சாலையில் நடந்து செல்லும் போதும் பின் தொடர்ந்து வரும் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் யாரும் இல்லாத நேரம் பார்த்து கழுத்தில் அணித்திருக்கும் தங்கச் சங்கிலியை பறித்து செல்கின்றனர். இந்த சம்பவங்கள் கோவையில் தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்களை கட்டுப்படுத்த இந்த நவீன திட்டம் உதவும் என இல்லத்தரசிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
குற்றம் நடந்த பின்பு காவல்துறையினர் வந்து நடவடிக்கைகள் எடுப்பதை விட, குற்றம் நடப்பதற்கு முன்னதாகவே வந்து பாதுகாப்பு கொடுக்கும் இந்த காவலன் ஆப்பிற்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் வரவேற்பையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.