நீலகிரி : குன்னூர் காட்டேரி பூங்கா பசுமையுடன் காட்சியளித்தாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதால் தோட்டக்கலைத் துறையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடங்கிய தொடர் மழையின் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தே காணப்படுகிறது. தற்போது, மழையின் தாக்கம் குறைந்து வெயிலும், மேகமூட்டமும் என காலநிலை மாறி,மாறி காணப்படுகிறது.

இந்த நிலையில், குன்னூர் காட்டேரி பூங்கா, சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் பசுமைக்கு மாறியுள்ளன. இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி வெறிச்சோடியே காணப்படுகிறது.
இது தொடர்பாக பூங்கா நிர்வாகிகள் கூறுகையில், “பொதுவாக இரண்டாம் சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மழை பெய்ததன் காரணமாக, தற்போது குறைவாகவே காணப்படுகிறது. வரும் வாரங்களில் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்,”என்றனர்.
இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவால், அவர்களை நம்பியே இருக்கும் பாதசாரி வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.