திருப்பூர் : விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூரில் உள்ள திருநங்கைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் : விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூரில் உள்ள திருநங்கைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- நாங்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில், அதன்பேரில், உடுமலைபேட்டை குடிமங்கலம், பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் திருநங்கையாக மாறிவிட்டார் என அவரது பெற்றோர்கள் கொடுத்த புகார் அளித்துள்ளனர். குடிமங்கலம் காவல்துறையினர் காணாமல் போன ராம்குமார் திருப்பூர் திருநங்களைகளிடம் இருப்பதாகவும், அவரை இருக்கும் இடத்தை சொல்லவில்லை என்றால் உங்களில் ஐந்து பேரை கைது செய்வோம் என்று மிரட்டுகிறார்கள். அடிக்கடி வந்து விசாரனை என்ற பெயரில் மிரட்டுகிறார்கள்.

இதனால், வீடுகளின் உரிமையாளர்கள் எங்களை விட்டை காலி செய்யுமாறு கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கையால் நாங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகிறோம். எனவே, எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.