நீலகிரி : கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நீலகிரி மலைப் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய அருவிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. குறிப்பாக, உதகை - கல்லட்டி மலைப்பாதை, கோத்தகிரி கேத்ரின் வனப்பகுதி, குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை, பக்காசுரன் மலைப்பகுதி, டைகர்ஹில் மலைப்பகுதி, லேம்ஸ்ராக், டால்பினோஸ், ஆடர்லி போன்ற வனப்பகுதிகளில் மழை அதிகமாக பொழிந்ததால் இப்பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன.

இதனை இவ்வழியாக பயணிப்போரை பரவசப்பட வைத்துள்ளது. இந்த அருவிகள் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும், பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காட்சித் தருகிறது. இந்த திடீர் அருவிகள் இவ்வழியாக பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.