கோவையில் 10 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மேலும் 10 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கோவை : உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மேலும் 10 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கடந்த ஜுலை மாதம் தமிழகப் போக்குவரத்துத் துறைக்கு தமிழக அரசால் புதிய பேருந்துகள் வழங்கப்பட்டன. அவற்றில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குப் பேருந்துகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒதுக்கி வைக்கப்பட்டன. கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு முதற்கட்டமாக ஏற்கனவே 25 புதிய பேருந்துகள் வழங்கப்பட்ட நிலையில், உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மேலும் 10 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 



இந்தப் பேருந்துகள், திருச்சி, ராமேஸ்வரம், திருநெல்வேலி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, சிவகாசி, குமிளி மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்தப் பேருந்துகளில் ஸ்பீடு கவர்னர், பயணிகளின் வசதிக்காக 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது, வெறும் 53 இருக்கைகள் மட்டுமே கொண்டுள்ளன. 



தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி., வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கோவை மாநகரில் முக்கிய சாலைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், 80% சதவீத சாலை விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. கோவையில் இருந்து பிற புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பேருந்து வசதிகளை அரசு வழங்கி வருகிறது. சென்னையில் இயங்கி வரும் எலக்ட்ரிக் பேருந்துகள் விரைவில் கோவையில் அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கோவையில் மாசுபாடு இல்லாத வகையில் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதன் மூலம், வழக்கமான பேருந்துகளை விட குறைந்த கட்டண எலக்ட்ரிக் பேருந்துகளை அரசால் அறிமுகம் செய்ய முடியும், என்றார். 

இதனிடையே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், இங்கிலாந்தைச் சேர்ந்த எலக்ட்ரிக் பேருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...