கோவை : சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு, தீ விபத்து காலங்களின் போது, பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்த செயல்விளக்கம் தெற்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது, உயரமான கட்டிடங்களில் சிக்கி உள்ளவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் முதலுதவி ஆகியன குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்துஸ்தான் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் முன்னிலையில் இந்த செயல்விளக்க நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜெயபால், தெற்கு வட்டாட்சியர் சியாமளா தேவி உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.