குரங்கணி தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் இருக்கும் வனப்பகுதிகளில் டிரெக்கிங் செல்வதற்கு புதிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்றவர்களில் 22 பேர் காட்டுத் தீயிக்கு இரையாகினர். இந்த நிலையில், டிரெக்கிங் செல்வதற்கு புதிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலர் / வன உயிரினக் காப்பாளர் / துணை இயக்குநரின் முன்அனுமதியினை உரிய முறையில் பெற்றிடல் வேண்டும். மலையேற்றம் மேற்கொள்வதற்கான பாதைகள், எளிதான பாதை, மிதமான பாதை மற்றும் கடினமான பாதை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ. 200/- வீதமும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ350/- வீதமும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.500/- வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளைப் பொறுத்தவரையில், எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.1,500/- வீதமும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.3,000/- வீதமும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு ரூ.5,000/- வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி, எளிதான பாதை, மற்றும் மிதமான பாதைகளில் மலையேற்றம் மேற்கொள்ளும் குழுவினர் தங்களுடன், ஒரு வழிகாட்டியினையும், கடினப் பாதையில் மலையேற்றம் மேற்கொள்ளும் போது ஒரு வழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், வனத்துறையில் பதிவு செய்து கொள்ளாத எந்த ஒரு நிறுவனம் / சங்கம் / அமைப்பும் மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்ய இயலாது என்பதும் விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்ட காலம், வழித்தடப் பயன்பாடு, மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டிய நேரம் ஆகியவைகளையும் உள்ளடக்கி இவ்விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வோர், இவ்விதிகளை கடைபிடித்து வனத்துறைக்கும், அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.