நீலகிரி : உதகை அருகே மஞ்சூர் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தி சுமார் 1 மணி நேரம் 80-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி : உதகை அருகே மஞ்சூர் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தி சுமார் 1 மணி நேரம் 80-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிக்கட்டி மற்றும் எடக்காடு ஆகிய பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மஞ்சூரிலிருந்து மதுப்பிரியர்கள் ஜீப் உள்ளிட்ட வாகனங்ளை வாடகைக்கு எடுத்துச் சென்று வெகு தொலைவில் உள்ள பிக்கட்டி மற்றும் எடக்காடு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்குச் சென்று மது அருந்தி வந்தனர். இதனால், தங்களுக்குப் பொருள் மற்றும் நேர விரயம் ஏற்படுவதாகக் கூறி மஞ்சூர் பகுதியில் இருந்த மதுக்கடையை மீண்டும் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்

இந்த நிலையில், இன்று மஞ்சூர் பகுதியில் உள்ள கடினமாலப் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டது. ஆனால், இதற்கு இப்பகுதி உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தால், இந்த மதுக்கடை மீண்டும் மூடப்பட்டது. இதனால், தங்களது வியாபாரம் பாதிப்பதாகக் கூறி இப்பகுதியில் உள்ள 80-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை மூடி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் மதுக்கடையை மீண்டும் திறக்காவிட்டால் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
