கோவை : ஏசியன் பெயின்ட்ஸ் சார்பில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் ஓவியம் வரைந்த நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கோவை : ஏசியன் பெயின்ட்ஸ் சார்பில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் ஓவியம் வரைந்த நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஏசியன் பெயின்ட்ஸ் சார்பில் அவரது உருவத்தையும் ஓவியமாக வரையும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஃபன் ரிபப்ளிக் மாலில் நடந்த இந்த நிகழ்வில், பள்ளிக் குழந்தைகள் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அப்துல்கலாமின் முகத்தை வண்ணமயமாக வரைந்து முடித்தனர். இந்த நிகழ்வு, உலக சாதனை மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மறைந்த அப்துல்கலாமின் பேரன்கள் ஏ.பி.ஜே.எம்.ஜே., ஷேக் சலீம் மற்றும் ஏ.பி.ஜே.எம்.ஜே., ஷேக் தாவூத் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலர் அமித் சிங்கிள் கூறுகையில்,"மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் அனைத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். அவரது 87-வது பிறந்த நாள் விழாவில் "மக்கள் குடியரசுத் தலைவரை" நினைவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார்.