கோவை : கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தொழில்நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பான முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்ட சிறு தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு - கொடிசியா மற்றும் பவர்2எஸ்.எம்.இ.யுடன் இணைந்து சிறு, குறு தொழில்நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பான முகாம் நடத்தப்பட்டது. இதில், 65-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில், சிறு, குறு நிறுவனங்களின் தரம் உயர்த்துவது, உற்பத்தியை அதிகரிப்பது, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, புதிய முறைகளை உற்பத்தியில் புகுத்துவது தொடர்பாக கொடிசியா சார்பில் விளக்கப்பட்டது.

இதில், எஸ்.ஐ.டி.பி.ஐ.யின் துணை பொதுமேலாளர் டி. பாலசந்திரன், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் மேம்பாட்டுக் கழகத்தின் துணை இயக்குநர் சதீஷ்குமார் மற்றும் பவர்2எஸ்.எம்.இ-ன் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்.