திருப்பூர் : திருப்பூர் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன.

மங்கலத்தையடுத்த கோதபாளையத்தில் திருப்பூரைச் சேர்ந்த மனீஷ் (45) என்பவருக்குச் சொந்தமான பஞ்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், வடமாநில மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஆலையிலுள்ள இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவெனப் பரவிய எரியத் தொடங்கியது.

இதையடுத்து, பணியில் இருந்த தொழிலாளர்கள் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கக் கடுமையாக போராடியும், தீ விபத்தின் தன்மை அதிக அளவில் இருந்ததால் உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அவினாசி, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு நிலையங்களில் இருந்து மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை சுமார் இரண்டு மணிநேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.