கோவை : திருவண்ணாமலை வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் உதவி பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர், 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வரும் தனக்கு, விடுதி காப்பாளர் மற்றும் பெண் உதவி பேராசிரியர்கள் இருவரும் பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும், அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வாணாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அக்கல்லூரியைச் சேர்ந்த எம்.ஏ., கிரிஜா என்ற 3-ம் ஆண்டு மாணவி, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அதில் இருந்து மீண்டு வருவதற்கு தாமதமானதாகவும் அவர் கூறியுள்ளார். "உதவி பேராசிரியர் தங்க பாண்டியனின் அறிவுறுத்தலின் பேரில் நான் எந்தவித கல்விசாரா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன் எனக் கூறிவிட்டேன்.

மேலும், அவரது அறிவுறுத்தல்களை நான் கேட்கவில்லை. அதனால், கல்லூரியில் இருந்து நான் டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். மேலும், பாலியில் சீண்டல்களை வைத்து தன்னை அச்சுறுத்தினார். முன்னதாக, இதேபோல, கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவரும் இதே போல பாதிக்கப்பட்டிருந்தார்," இவ்வாறு கூறினார் மாணவி எம்.ஏ., கிரிஜா.
மேலும், பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாக கல்லூரியில் இருப்பவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ கூறக் கூடாது எனவும் மிரட்டியதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, உதவி பேராசிரியர் தொடர்பாக விடுதி காப்பாளர் புனிதாவிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவி குற்றம்சாட்டினார்.
"இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரனிடம் நோட்டீஸ் மூலம் தெரிவித்தேன். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், கல்லூரியின் புகார் குழுவினரிடம் புகார் அளித்தேன். அதன்பேரில், வேறு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பயில்வதற்கான ஆணை வழங்கப்பட்டது," என்றார் மாணவி கிரிஜா.

மேலும், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பாதிக்கப்பட்ட தன்னை திருச்சியில் இருக்கும் அன்பில் தர்மலிங்கம் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டேன். அங்கு கடந்த மாதம் 08-ம் தேதியில் இருந்து 5-வது செமஸ்டரை தொடங்கினேன். ஆனால், அங்கு கல்வி பயில்வதை நான் விரும்பவில்லை. என்னால், அங்கு அமைதியான கல்வியை கற்க முடியாது. அதேவேளையில், இந்த வழக்கிற்காக நான் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். என்னால், திருச்சியில் இருந்து கொண்டு வந்த செல்ல முடியாது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரையில் நான் போராடுவேன். எனக்கு, விடுதி துணை காப்பாளர் புனிதா கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார்," என்றார்.
இதனிடையே, இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே. ராமசாமி கூறுகையில்," எங்களது முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக இருப்போம். அவரது கல்வியைத் தொடர உறுதுணையாக இருப்போம்," இவ்வாறு கூறினார்.