கோவை : குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டன.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு 20 சீரநாயக்கன்ப்ளையம், எம்.ஜி.ஆர். நகரில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 117 குடியிருப்பு வாசிகளுக்கு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. அதாவது, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை இடிக்கக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி, ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இந்தப் பணிகளின் போது செயற்பொறியாளர் திட்டங்கள் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) விமலா, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.