கோவையில் சிகிச்சையின் போது தப்பியோடிய சிறை கைதியை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

கோவை : அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சிறைக் கைதியை பிடிக்க 3 தனிப்படை அமைத்து கோவை மாநகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சிறைக் கைதியை பிடிக்க 3 தனிப்படை அமைத்து கோவை மாநகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்வம் என்ற செல்வராஜ் (31). இவர், பீளமேடு பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை இவரது மனைவி வாரந்தோறும் வந்து மனு போட்டு சந்திப்பது வழக்கம். ஆனால், மனைவிக்கும், செல்வராஜுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு பிணையில் சென்றிருந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபத்தில் இருந்த மனைவி செல்வராஜை சுமார் மூன்று மாதங்களாக வந்து பார்க்கவில்லை.



இதனால், மனம் உடைந்து போன கைதி கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பிகளை வைத்து இடது மணிக்கட்டில் அறுத்துள்ளார். மேலும், கொசு விரட்டி மருந்தையும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், இதையறிந்த சக கைதிகள் சிறைத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த சிறைத்துறை அதிகாரிகள் கைதியை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி செல்வம் எதிர்பாராதவிதமாக மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, மருத்துவமனை வளாகம் முழுவதும் தனியார் காவலர்கள் செல்வத்தை தீவிரமாக தேடினர். அதேபோல, சிறைத்துறை காவலர்களும், கோவை மாநகர போலீசாரும் தப்பி ஓடிய சிறைக் கைதியை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதேபோல கைதிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சரவணனும் கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், தப்பிச் சென்ற சிறைக் கைதியை பிடிக்க கோவை மாநகர போலீசார் 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

அதேபோல, குற்றவாளியை விரைவாகப் பிடிக்க அவரது விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதில், தப்பிச் சென்ற சிறைவாசியின் உடல் அமைப்பு, உயரம், முடி அமைப்பு, நிறம், உடலில் உள்ள அடையாளங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த அடையாளங்களைக் கொண்ட நபரை கண்டால் உடனடியாக E-2 பீளமேடு காவல் நிலையத்திற்கு 0422 2570200 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...