உதகையில் வனவிலங்கு - மனித மோதல் சம்பவங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி

நீலகிரி : உதகை அரசு கலைக் கல்லூரி சார்பில் முதன்முறையாக வனவிலங்கு - மனிதமோதல் மற்றும் பல்வேறு வனவிலங்குகளின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

நீலகிரி : உதகை அரசு கலைக் கல்லூரி சார்பில் முதன்முறையாக வனவிலங்கு - மனிதமோதல் மற்றும் பல்வேறு வனவிலங்குகளின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் வனவிலங்குகள் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துவதால் வனவிலங்கு, மனித மோதல்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருவது வாடிக்கையாக உள்ளது.



இதனைத்தொடர்ந்து, வனவிலங்கு - மனிதமோதல் சம்பவங்கள் குறித்தும், வனவிலங்குகளின் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உதகை அரசு கலைக் கல்லூரி மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை இணைந்து உதகை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் முதன்முறையாக காணுயிர் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.



3 நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் வனவிலங்கு - மனிதமோதல்கள் ஏற்படக் காரணமான புகைப்படங்கள், யானை, புலி, சிறுத்தை மற்றும் பல்வேறு அரிய வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...