கோவை : சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் 14-ம் தேதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் மாபெரும் நிகழ்ச்சிக்கு நடக்கிறது.
கோவை : சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் 14-ம் தேதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் மாபெரும் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவையில் உணவுப் பற்றாக்குறையை தவிர்க்கும் விதமாக, மாநகரில் உணவு வீணாவதைத் தடுக்க மாவட்ட உணவு வங்கி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 16-ம் தேதி சர்வதேச உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுமார் 1,000 ஆதரவற்ற மக்களின் பசியினை போக்கும் வகையில் மாபெரும் உணவு வழங்கும் நிகழ்ச்சி கோவை உணவு வங்கியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்திபுரம் அருகே உள்ள நியூ சித்தாபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 14-ம் தேதி காலை 09.15 மணி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.
இது குறித்து கோவை உணவு வங்கியின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், "வரும் 14-ம் தேதியன்று 'இளம் வயதில் தானம், மகிழ்வான பிளேட் சவால், அன்புடன் சமையல்' போன்ற மூன்று முக்கிய பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளோம். இதனை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் கோவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைக்க உள்ளார்.
இளம் வயதில் தானம் என்பது கல்லூரிகளில் உணவு வீணடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதுடன், கல்லூரிகளில் உணவு வீணடிக்கப்படுகிறதா என்பதை உணவு மையங்களைக் கொண்டு கண்காணிக்க உள்ளோம். மகிழ்வான பிளேட் சவால் என்பது ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் வழங்கப்படும் உணவு தட்டுகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களால் அறிவுறுத்தப்படுவதே ஆகும். அன்புடன் சமையல் என்ற பிரச்சாரமானது, உணவு தேவைப்படுவோருக்கு, தானமாக வழங்க நினைப்பவர்களே சமைத்து கொடுப்பதாகும், இவ்வாறு அவர் கூறினார்.
‘
மேலும், இந்த நிகழ்ச்சியின் போது கோவையில் வீடில்லாத, பசியில்லாத வாழ்க்கையை உருவாக்குவோம் என்ற திட்டம் பற்றியும் எடுத்துரைக்கப்படுகிறது.