கோவை : கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோக திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள 11 உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி திட்ட இயக்குநர் லினா ஹோப்லிங், பொறியாளர் ஜெராடு நால், அலுவலர் அர்ச்சனா ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 11 உள்ளாட்சி அமைப்புகளுக்கு அம்ரூத் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் ரூ. 550 கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மாநகராட்சியுடன் இணைந்து திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விளக்கிக் கூறினார்.
மேலும், தற்போது நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்கி வருவதனை மாநகராட்சி பழைய பகுதிகளுக்கு வழங்கப்படுவதுபோல் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் நாளொன்றுக்கு வழங்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரங்கராஜ், நகராட்சி நிர்வாக ஆணைய சுற்றுச்சூழல் பொறியியல் சிறப்பு வல்லுநர் மரு.வைத்தீஸ்வரன், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் துணைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.