சென்னை: மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டப்பூர்வ விசாரணை நடந்து வந்தால் 6 மாதத்திற்கும் மேலாக ஆளுநர் மாளிகை மவுனம் காத்து வந்தது. ஆனால் இந்த விஷயத்தில் உண்மையை அறியாமல் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை. ஆளுநரையோ, அவரது செயலாளர் மற்றும் அதிகாரிகளையோ அவர் சந்திக்கவில்லை. மதுரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கவில்லை.
நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை சரிபார்க்காமல் நக்கீரனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மையை தெரிந்துகொள்ளாமல் நக்கீரனில் வந்த தகவல்களை சிலர் ஆதரிக்கின்றனர். அடிப்படை ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிட்டதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் மனு தரப்பட்டது.
ஆளுநருக்கு நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்து கொள்ள முடியாது. கண்ணியத்தைக் கெடுக்கும் செயல்களுக்கு ஆளுநர் அலுவலகம் ஒருபோதும் அடிபணியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.