கோவை : அன்னூரில் மனைவியுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட வாலிபரை ஆத்திமடைந்த கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : அன்னூரில் மனைவியுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட வாலிபரை ஆத்திமடைந்த கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அடுத்த அரசூரைச் சேர்ந்த வாலிபர் மணிகண்டன். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அதே அரசூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி சத்யா என்பவருக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சத்யாவின் கணவர் ரஞ்சித்திற்கு தெரிய வந்ததால், அவர் இருவரையும் கண்டித்ததுடன், இது குறித்து மணிகண்டன் மீது சூலூர் காவல்நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி, பின்னர் குடும்ப விவகாரம் என்பதால் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இருப்பினும், மணிகண்டன் மற்றும் சத்யா இருவரும் தொடர்ந்து பழகி வந்ததால், ஆத்திரமடைந்த ரஞ்சித் தனது நண்பர்கள் மூலமாக மணிகண்டனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். மணிகண்டனும் உள்ளூர்வாசி என்பதால், நண்பர்களை வைத்து மது குடிக்க நேற்று இரவு அன்னூர் அழைத்து வந்துள்ளனர். மது குடித்த பின்னர் போதையில் இருந்த மணிகண்டனை ரஞ்சித் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை தற்கொலையாக மாற்றும் நோக்கில் அன்னூர் அருகே பச்சாபாளையம் குளத்தில் சடலத்தை வீசி சென்றுள்ளனர். இதையடுத்து, அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அந்த குளத்தின் வழியே சென்ற பொதுமக்கள் குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த அன்னூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.