கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு, கடை மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான கட்டிட உரிமத்தை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும் முறை வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு, கடை மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கான கட்டிட உரிமத்தை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும் முறை வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கட்டிட அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்தவும், கட்டிட விண்ணப்ப பரீசலனைக்கான கால அளவை குறைக்கவும், விண்ணப்பங்களையும், கட்டணத்தையும் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைனில் சமர்ப்பிக்கவும் கட்டிட அனுமதிக்கான பணிகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாக ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 15-ம் தேதி முதல் கட்டிட உரிமத்தை ஆன்லைனில் பெறும் வசதியை தமிழகம் முழுவதும் தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையம் சார்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கும் உரிய மென்பொருள் ஏற்பாடுகளை செய்யுமாறு கடந்த மாதம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கட்டிடத்தின் வரைபடம், கட்டப்படும் இடத்தின் ஆவணங்கள் மற்றும் கட்டணத் தொகை ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக செலுத்திய பின், நகரமைப்பு அலுவலர்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, 30 நாட்களுக்குள் கட்டிட அனுமதி ஆன்லைன் மூலமாகவே வழங்கிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஆன்லைன் கட்டிட அனுமதி பெறும் வசதியால், அதிகாரிகள் முறைகேடாக பணம் வாங்குவதும், உரிமம் பெறுவதற்கான காலமும் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதாக கட்டிட பொறியாளர்கள் கூறுகின்றனர்.