கோவை: அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதை கண்டித்து இந்தி மொழி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக த.பெ.தி.க பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
கோவை: அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயல்வதை கண்டித்து இந்தி மொழி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக த.பெ.தி.க பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
கோவை பெரியார் படிப்பகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், "மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அனைத்து துறைகளிலும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கிறது. தமிழக மக்கள் இந்தியை விரும்பாத வரை இந்தியை கட்டாயமாக்கமாட்டோம் என்ற முன்னாள் பிரதமர் நேருவின் உறுதிமொழியை மீறும் வகையில் உள்ளது. இதனை கண்டித்து இந்தி மொழி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.
கோவை-பொள்ளாச்சி சாலையில் மைல்கற்களில் இந்தி மொழியில் எழுத்துகள் இடம் பெற்று உள்ளன. இந்தி மொழியில் உள்ள எழுத்துகளை அகற்றவில்லை எனில், வருகின்ற 14-ம் தேதி த.பெ.தி.க சார்பில் இந்தி அழிப்பு போராட்டம் நடத்தப்படும்." என்றார்.