நீலகிரி: ஏழு மாதங்களுக்குப் பிறகு குன்னூர் ரேலியா அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் குன்னூர் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருவதால், நீலகிரி மாவட்டத்திலேயே அதிகபட்ச மழை இங்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில், 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், குன்னூர் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது என்கின்றனர் அதிகாரிகள்.
அதே நேரத்தில், இந்த நீர் அருகில் உள்ள ஜெகதளா பேரூராட்சியின் தடுப்பணையில் சென்று சேர்க்கிறது. ஆனால், அங்கும் தடுப்பணை தூர்வாரப்படாததால், அங்கிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள கிராமங்கள் வழியாக வீணாக செல்கிறது.
இதற்கு முன்பு கடந்த, 2015-ல் மூன்று முறை தண்ணீர் நிரம்பி வெளியேறியது. இது குறித்து மக்கள் கூறுகையில், "தற்போது அணை முழுவதும் நிரம்பியுள்ளதால் ஆங்காங்கே நிலத்திற்கடியில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்புளை சீர்செய்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்." என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.