கோவை: நீர் ஆதாரங்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது நீர் நிலைகளை தூர் வார வேண்டும், நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தண்ணீர் மாசுபடுவதை தடுத்திட வேண்டும், தடுப்பணைகளை கட்ட வேண்டும், உபரி நீரை சேமிக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய அக்கட்சியினர், கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாநில விவசாயிகள் அணி செயலாளர் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.