திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடக்கோரி திருப்பூர் அனைத்துக் கட்சி தலைவர்கள் தலைமையில் வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இன்று திருப்பூர் வடக்கு வட்டாச்சியரிடம் மனு அழைக்கப்பட்டது.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த டாஸ்மாக் கடையால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் அந்த பாதையில் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை மூடினர்.
டாஸ்மாக் கடை திறக்க அந்த பகுதியில் திறக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் கடந்த ஜூலை 2ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரும் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்தார். ஆனால், ஜூலை 9ம் தேதியே மீண்டும் கடை திறக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடையை பூட்டி சென்றார்.
இந்நிலையில் மீண்டும் ஜூலை 26ம் தேதி கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் கடை அடைக்கப்பட்டது.
பின்னர் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினாலும் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடையை திறப்பதிலேயே குறியாக உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்தும், புதிய பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி திருப்பூர் அனைத்துக் கட்சி தலைவர்கள் தலைமையில் வரும் 16ம் தேதி புதிய பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக உண்ணாவிரத்திற்கு அனுமதி கேட்டு திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயகுமாரிடம் மனு அளித்தனர்.