கோவை: உலக கண் ஒளி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த மாணவி தர்ஷினியின் சேவையை பாராட்டி கோவை, தொண்டாமுத்தூர் அருகில் உள்ள உலியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி கூறியதாவது:-
எங்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் சுமார் 16 மாணவ மாணவியர் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த பள்ளியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பயின்று வருகின்றார்கள்.

எங்கள் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு கோவை யுவபாரதி பள்ளியில் பயிலும் மாணவி நான்காம் வகுப்பு மாணவி தர்ஷினி எந்த பிரதிபலனும் இன்றி வாரம் இரண்டு முறை இலவசமாக பொது அறிவு, கதை மற்றும் பாட்டு ஆகியவற்றை பயிற்றுவித்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களாக தவறாமல் இங்கு வந்து இச்சேவையை செய்து வருகின்றார்.
எனவே இவரது சேவையை பாராட்டி மாணவி தர்ஷினிக்கு எங்கள் பள்ளி சார்பில் இன்று பாராட்டு விழா செய்துள்ளோம். இம்மாணவியின் இந்த முயற்சி மென்மேலும் தொடர்ந்திட எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இம்மாணவியைப் போல மற்ற மாணவ, மாணவியர்களும் தொடர்ந்திட வேண்டுகிறோம்.
இம்மாணவி தர்ஷினி சிறு வயதிலிருந்தே விளையாட்டு மற்றும் கலைகளில் மிகவும் ஆர்வமாக உள்ளார். இவர் கடந்த 2016 மார்ச் மாதம் தனது 7-வது வயதிலேயே ஸ்பீடு மாரத்தான் ஸ்கேட்டிங் மூலம் கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தை 10.5 கி. மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்து ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புரிந்துள்ளார். 2017 – ம் வருடம் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்கள் மாணவி தர்ஷினியை பாராட்டி, சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் தனது கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழை அனுப்பியுள்ளார். மாணவி தர்ஷினி சிலம்பாட்டத்தில் மாவட்ட அளவில், வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி தர்ஷினி கூறுகையில், "சிறு வயதிலிருந்தே எனக்கு விளையாட்டு, சமூக சேவை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மிகவும் ஆர்வம் அதிகம். இந்த பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு நான் கற்றவற்றை சொல்லி இவர்களின் அறிவையும் வளர்க்க ஆசைப்பட்டேன், இதற்கு இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி மிகவும் ஆதரவளித்தார். இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது முயற்சியின் மூலம் இவர்கள் கற்கிறார்கள், இவர்களுக்காக நான் தினமும் புதுப்புது விசயங்களை கற்று வருகின்றேன். இதன் மூலம் அவர்களது வளர்ச்சியும், எனது வளர்ச்சியும் மேம்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதே எனது லட்சியம்.." என்றார்.
மேலும், விழாவில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் மணிகண்டன், உதவி விடுதி வார்டன் டயானா, மாணவி தர்ஷினியின் பெற்றோர்கள் கமலக்கண்ணன், உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்