கோவை: சாடிவயல் யானைகள் முகாமில் உள்ள சேரன் என்ற 32 வயது கும்கி யானைக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த யானையும், ஜான் (27) என்ற யானையும் முதுமலை யானைகள் காப்பகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் அழைத்து வரப்பட்டன. அப்போதே சேரனுக்கு கண் பார்வை குறைபாடு இருந்தது. இருந்த போதிலும் கடந்த ஆறு மாதங்களாக இரண்டு யானைகளுக்கு மருத்துவ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எட்டு பேர் கொண்ட மருத்துவக் குழு கடந்த 15 நாட்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த மருத்துவக் குழு வலது கண்ணில் புரை ஏற்பட்டுள்ள சேரனுக்கு சிகிச்சை அளித்து வந்தன.

இந்த சூழலில், தற்போது யானையின் உடல்நிலையில் முன்னேற்ற ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.