கோவை : தமிழில் தேர்வு எழுத அனுமதிக்காத மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தமிழ் மீது பற்று கொண்ட அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய மாணவர் சங்கமான எஸ்.எப்.ஐ.,யின் மாநில செயலாளர் மாரியப்பன் கோவை காட்டூர் பகுதியில் உள்ள சி.ஐ.டி.யூ மில் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- தமிழில் தேர்வு எழுத அனுமதிக்காத காரணத்தால் தென் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் இருந்து கல்வியை இடைநிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் விருப்ப வாய்ப்பையே பல்கலைக் கழக நிர்வாகம் நீக்கியுள்ளது.
மேலும், உரிமைக்காகப் போராடிய மாணவர்களை துணைவேந்தரின் வேலையாட்கள் போல், போலீசார் தாக்கியதோடு பொய் வழக்குகளையும் பதிவிட்டுள்ளனர். தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு மாணவர்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டும்.
மேலும், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால், அடுத்த கட்டமாக மாணவர்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். தமிழ் மீது பற்றுகொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்காததைக் கண்டித்து மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இது தொடர்பாக அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு கோர முடிவு செய்துள்ளோம், என்றார்.
இந்த சந்திப்பின் போது அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ், மாவட்ட செயலாளர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.