நீலகிரி : ஐ.என்.எக்ஸ். மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கிற்கு சொந்தமான உதகை பங்களாக்கள் உள்பட ரூ. 54 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களான பீட்டர் முகர்ஜியும், அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். கடந்த 2007-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக அன்னிய முதலீடுகள் பெற முடிவு செய்தனர்.
அந்த வகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை விற்றதாகத் தெரிகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமானால் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் செல்வாக்கை பயன்படுத்தி, அந்த நிறுவனத்திற்கு கணிசமான செலவில் தடையில்லா சான்றை கார்த்தி பெற்றுக் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாகவும், அமலாக்கத்துறையும், சி.பி.ஐ. அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இருப்பினும், இந்த வழக்கில் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், கார்த்திக்கிற்கு சொந்தமான கொடைக்கானல் காட்டேஜ், உதகையில் இரண்டு பங்களாக்கள், லண்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 கோடியாகும். மேலும், ரூ.90 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கார்த்தி, ஐ.என்எக்ஸ். நிறுவனத்தின் இந்திராணி முகர்ஜி, பீட்டரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.