கோவை வாசிகளே உஷார்: அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் அனுமதி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாகப் பரவியது. அவ்வாறு பரவிய காய்ச்சல்கள் காரணமாக கோவை, திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இதனைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் டெங்கு பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில் தற்போது கோவையில் பெய்துவரும் மழை காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 9 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் என மொத்தம் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே பன்றி காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உடல்நிலை தேறியுள்ளார். 

இப்படி மீண்டும் பரவி வரும் விஷக்காய்ச்சல்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...