கோவை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, வருகின்ற 13-ம் தேதி கோவையில் சரணகோஷ யாத்திரை நடத்தப்படுமென கோயமுத்தூர் ஐய்யப்பா சேவா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோயமுத்தூர் ஐய்யப்பா சேவா சங்கத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அச்சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், "ஐயப்பன் கோவிலில் காலங்காலமாக கடைபிடித்து வரும் முறையினை பின்பற்ற கோரி, கோவையில் வருகின்ற 13-ம் தேதி சரண கோஷ யாத்திரை நடத்தப்படும்.சித்தாபுதூர் பகுதி முதல் வி.கே.கே மேனன் சாலை வரை இந்த யாத்திரை நடத்தப்படும். இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு அஷ்டான ஆச்சாரங்கள் உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட வயது பெண்களை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது." என்றார்.