கோவையில் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படும் நவராத்திரி: 'பேசும் பொம்மைகள்'

கோவை: நவராத்திரியை முன்னிட்டு ஜூவெல் ஒன் நிறுவனம் சார்பில் பேசும் பொம்மைகள் என்ற நிகழ்ச்சி நேற்று (புதன்கிழமை) தொடங்கி வரும் 18 வரை ப்ரோஸோன் மாலில் நடைபெறுகிறது.

கோவை: நவராத்திரியை முன்னிட்டு ஜூவெல் ஒன் நிறுவனம் சார்பில் பேசும் பொம்மைகள் என்ற நிகழ்ச்சி நேற்று (புதன்கிழமை) தொடங்கி வரும் 18 வரை ப்ரோஸோன் மாலில் நடைபெறுகிறது.

 'அழகு' என்ற தன்மை எந்த விளக்கங்களுக்குள்ளும் கட்டமைப்புகளுக்குள்ளும் அடங்காது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாகக் கொண்டாடும் இந்நிகழ்வின் முதல் நாளான நேற்று சரணாலயம் மற்றும் சகோதரி அறக்கட்டளை போன்ற அமைப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 



கொலுவில் சகோதரி அறக்கட்டளையைச் சேர்ந்த நபர்கள், தங்கள் கைகளால் தயாரிக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொம்மைகளை வைத்தனர். நிகழ்ச்சியை பாடகர் கானா பாலா, ரோட்டரி கிளப் வெஸ்ட் இயக்குனர் லட்சுமணன், சகோதரி அறக்கட்டளையின் நிறுவனர் கல்கி சுப்ரமணியம், சரணாலயம் அறக்கட்டளையின் நிறுவனர் வனிதா தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



"இந்த மக்களின் திறமைகளை பார்ப்பது ஒரு தனி சிறப்பு. இது போன்ற நிகழ்வில் நான் முதன்முறையாக பங்கேற்கிறேன். கோவை மக்கள் திறமைகளை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது." என்றார் கானா பாலா.



ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் திருநங்கைகளின் திறமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், "அன்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய தலையாய குணாதிசயங்களில் ஒன்று. அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது." என்றார் ஜூவெல் ஒன் நிறுவனத்தின் இயக்குனர் நிஷ்டா.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...