கோவை : நவராத்திரியை உற்சாகமாகக் கொண்டாட ரெசிடென்சி டவர்சில் உணவுத் திருவிழா இன்று முதல் தொடங்கியது.
கோவை : நவராத்திரியை உற்சாகமாகக் கொண்டாட ரெசிடென்சி டவர்சில் உணவுத் திருவிழா இன்று முதல் தொடங்கியது.

நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த 9 நாட்களுக்கு நவராத்திரி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தி ரெசிடென்சி டவர்சில், கைதேர்ந்த சமையற் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட நவராத்திரி விழாக் கால உணவுத் திருவிழா இன்று தொடங்கியது. தலைமை சமையற் கலைஞர் அஜீத் ஜெனார்த்தனன் தலைமையிலான குழுவினர், இந்த 9 நாட்களிலும் நவராத்திரி விழாவின் சிறப்புமிக்க உணவுகளை செய்து அசத்த இருக்கின்றனர்.

"இந்த உணவு வகைகள் நவராத்திரி விழாவிற்கு உட்பட்டது போன்ற கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த எங்களது வீட்டு சமையற் கலைஞர் ஜோதி வோரா, குடும்பத்துடன் இங்கு வந்து தங்கியுள்ளார். எங்களது குழுவினரால் உணவுகள் பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன," என்கிறார் தலைமை சமையற் கலைஞர் அஜீத் ஜெனார்த்தனன்.

நவராத்திரி விழாவையொட்டி பெரும்பாலானோர் விரதம் இருப்பார்கள் என்பதால், கிரீன் பியஸ் மசாலா, கிரீன் பியஸ் குகிராஸ், வாழைப்பழத்தால் தயார் செய்யப்பட்ட கீழ சப்ஜி, காதி முல்வாளி, ரொட்டிகள் மற்றும் இனிப்புகள் என பலவகை உணவுகள் இந்த உணவு திருவிழாவில் இடம் பெறுகின்றன.