கோவையில் வேட்டை தடுப்பு அதிவிரைவுப் படையினருக்கு தொடர்ந்து இழுபறியாகும் மாதாந்திர ஊதியம்

கோவை : கோவை மாவட்ட வனக் கோட்டத்திற்குட்பட்ட அதிவிரைவுப் படையினருக்கு கடந்த 3 மாத ஊதியம் நிலுவையில் இருந்து வரும் நிலையில், உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாவட்ட வனக் கோட்டத்திற்குட்பட்ட அதிவிரைவுப் படையினருக்கு கடந்த 3 மாத ஊதியம் நிலுவையில் இருந்து வரும் நிலையில், உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு கோவை மற்றும் கூடலூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதைத் தடுப்பதற்காக 2 வனப் பாதுகாப்புக் குழுவை தமிழக அரசு நியமனம் செய்தது. கடந்த மார்ச் மாதம் 10 பேர் அடங்கிய கோவை கோட்டத்திற்குட்பட்ட வனத்துறையினரின் அதிவிரைவுப் படையினருக்கு ரூ. 89 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதனிடையே, கூடலூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட பகுதிக்கு மேலும், ஒரு குழு அமைத்து, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருக்கும் 3 குழுவினருக்கு தலா ரூ. 30 லட்சம் பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டது. 

இந்தக் குழுவினர் கோவை மற்றும் கூடலூர் வனக்கோட்டங்களில் சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் ஊடுருவலைத் தடுத்து வந்தனர். 

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினருக்கு நிதிப்பற்றாக்குறையால் நடப்பு நிதியாண்டுக்கான மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு ஊதியம் நிலுவையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் வனத்துறையினருக்கு (ரூ. 9,750) வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பிடும் போது, கோவை வனத்துறையினருக்கு ரூ. 8,500 மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால், குறைந்த ஊதியத்தில் இருந்து இன்னும் குறைத்து வெறும் ரூ. 6,750 மட்டுமே வழங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.  

இதனிடையே, நிலுவையில் இருக்கும் 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...