திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது

திருப்பூர் : திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



திருப்பூர் ஊரக காவல் நிலையத்திற்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் கடந்த 6-ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பெயர் இப்ராஹிம் (28) என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், முறையான ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி பணியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 



தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன் செவந்தாம்பாளையம் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த சுபியன் (31), பர்காத் (32) ஆகிய மேலும் 2 பேரை கைது செய்தனர். வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைந்து, அங்கிருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்தது மாவட்ட ஊரக போலீசாரின் விசாரணையின் போது அவர்கள் கூறினர்.

மேலும் இவர்கள் அளித்த தகவலின் பேரில், செவந்தாம்பளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அல்அமீன் (24), அஸ்ரஃபுல் இஸ்லாம் (31), ஃபர்ஹாட் ஹோசன் (18), பொளாஸ் சந்திர சோர்க்கார் (28), ரோனி (30) ஆகிய மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 8 பேரும் திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்குக் கொண்டு சென்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...