கோவை : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரும் காலங்களில் அரசு நிதியில் இருந்து ஓய்வூதியம் வழங்கபடமாட்டது என்ற உறுதியை சர்வதேச நிதி நிறுவனங்கள் நடத்திய கூட்டத்தில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டதை கண்டித்தும், 8-வது ஊதிய திருத்தத்தின் 21 மாத நிலுவை தொகையை வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மதன், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில துணை தலைவர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, மத்திய, மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.