கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை 90-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை 90-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
இந்த அமைப்பு கடந்த 1329-ம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் சண்முகம் செட்டி அவர்களால் தொடங்கப்பட்டது. இதன் ஆண்டு விழா நேற்று அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.

விழாவில் அவர், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் புதிய தொழில் முனைவோர்கள் அதிகரித்து வருவது பெருமையளிப்பதாக கூறினார். மேலும், வளர்ச்சி திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பொருளாதார சீர்திருத்த திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் பேசினார். மேலும், எந்தவொரு பொருளாதார சீர்திருத்தமும் ஆரம்பத்தில் பிரச்சனைகளை கொடுத்தாலும், நாட்டிற்கு நீண்டகால ஆதாயங்களைக் கொண்டுவரும் என்றார்.

முன்னதாக, இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் பத்து தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. தற்போதைய தலைவர் லட்சுமிநாராயணசாமி வரவேற்புரை வழங்கினார். அப்போது, கோவை விமான நிலையத்தை மேம்படுத்த துணை ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.
