கோவை : குழந்தைத் தொழிலாளர் முறை பற்றிய புகைப்படக் கண்காட்சி பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கியது.

சமூக ஆர்வலர் திவ்யா பாரதியின் இயக்கத்தில் வெளியான 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தின் மூலம் துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை முறையானது உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும், புகைப்படக் கலைஞருமான பழனிகுமார், குழந்தை தொழிலாளர் முறையைப் புகைப்படங்களாக எடுத்துள்ளார்.

இந்த நிலையில், 'தின்கர்ஸ் அசோசியேசன்' சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை பற்றிய புகைப்படக் கண்காட்சி பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கியது. இன்று முதல் 2 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில், பழனிகுமார் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.