கோவை : மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சரிசெய்யக்கோரி தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் வடக்கு மண்டல துணை ஆணையாளரை நேரில் சந்தித்து இன்று மனு அளித்தார்.

கோவை மாநகராட்சி வார்டு எண் 38, 39 மற்றும் 40-க்கு உட்பட்ட பீளமேடு மாரியம்மன் கோவில் வீதி, கள்ளிமேடு வீதி, வி.கே.சாலை, பழைய தபால் நிலையம் சாலை, ரேணுகாதேவி கோவில் சாலை, வ.உ.சி. காலனி, எல்லைத்தோட்டம் ரோடு, ஆவாரம்பாளையம் சிந்தாமணி நகர், துரைசாமி லேஅவுட், இ.பி.காலனி, ஃபேஸ் 2 ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டு, மிகவும் பழுதடைந்துள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் சாலையை கடப்பதில் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். மேலும், பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக புதிய தார் சாலைகளாக அமைக்க வலியுறுத்தி வடக்கு மண்டல துணை ஆணையாளரிடம் மனு அளித்தார்.
மேலும், அவர் வடக்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகளுடன் இனைந்து சுமார் 2 கி.மீ. நடந்து சென்று பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டு பழுதடைந்துள்ள சாலைகளைப் பார்வையிட்டார்.